புதுச்சேரியில் திருமணமாகி ஒரே ஆண்டில் இளைஞர் தற்கொலை.. போலீஸ் விசாரணை.!

0 2403

புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டில் 30 லட்ச ரூபாய்க்கும் மேல் இழந்து, அதனால் மனைவியும் பிரிந்து சென்றதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருக்கனூரைச் சேர்ந்த ஐயனார் - சந்திரகலா தம்பதிக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

பெங்களூருவில் பொறியாளராகப் பணியாற்றி வந்த ஐயனார், ஊரடங்கால் வேலையிழந்து சொந்த ஊர் வந்ததாகவும் அதன் பின்னர் சரியாக வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கியதாகவும் கூறப்படும் நிலையில், மனைவியின் நகைகளை அடகு வைத்து தனது செலவுகளை சமாளித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் சந்திரகலா தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில், ஐயனார் எலி மருந்தை உண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, அவர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி 30 லட்ச ரூபாய் வரை இழந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மனக்கசப்பிலேயே மனைவி பிரிந்து சென்றதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments