வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தயாரிப்பு ஆலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், சேலத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
ஓமலூர், காமலாபுரம், கருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வரும் நிலையில், அதில் சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக வெகுவாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஆலைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில், தற்போது ஆலைகளில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
இப்பணிகளை ஆய்வு செய்து வரும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வெல்லத்தில் ரசாயன பொருட்களை கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
Comments