அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு : சி,டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ. 3000 பொங்கல் பரிசு - முதலமைச்சர் அறிவிப்பு

0 4355

ரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வும், சி, டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக, 8 ஆயிரத்து 894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசின் செய்திக்குறிப்பில், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 14 சதவிகிதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி 17 சதவிகிதத்திலிருந்து, 31 சதவிகிதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு தோராயமாக, 8 ஆயிரத்து 724 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

மேலும், அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments