சென்னையில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த வழக்கில், 6 பேர் கைது.!

0 4034

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த வழக்கில், 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பசுபதி என்பவரின் உறவினரான 16 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவன் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை பசுபதி தட்டிக்கேட்ட நிலையில், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் 17 வயதான சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் பசுபதியையும் தடுக்க வந்த ஜானகி என்ற பெண்ணையும் அரிவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சீனிவாசன் தண்டையார்பேட்டையில் ஷேர் ஆட்டோவில் செல்வதை அறிந்த பசுபதியின் உறவினர்கள் 6 பேர் ஆட்டோவை வழிமறித்து சீனிவாசனை இருசக்கர வாகனத்தில் ஏற்றி புதுவண்ணாரப்பேட்டைக்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பில் பதுங்கியிருந்த பசுபதியின் உறவினர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments