புதுச்சேரியில் 2 நபர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி.!

0 2684

புதுச்சேரியில் முதல்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 80 வயது முதியவருக்கும் 20 வயது இளம்பெண்ணுக்கும், கடந்த சில தினங்களாக அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவமனையில் இருவருக்கும் பரிசோதனை செய்து மாதிரி முடிவுகள் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் அவர்களுக்கு ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் இருவரும் நலமாக உள்ளதாகவும், ஒமைக்ரான் தொற்று குறித்து பொதுமக்கள் கவலைபடத் தேவையில்லை என்றும், புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments