வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருட்டு...!

0 2213

சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 3 மர்ம நபர்கள் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சைதாப்பேட்டை சாரதி நகரைச் சேர்ந்த ஃபைசல் ரகுமான் கடந்த 24-ம் தேதி வழக்கம் போல் தனது KTM Duke இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் தூங்கியுள்ளார். இந்நிலையில் 25-ம் தேதி அதிகாலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், பூட்டை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments