பாஹியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு.! வரலாற்றிலேயே மிக மோசமான பேரழிவு ஆளுநர் வேதனை.!

0 1959

பிரேசில் நாட்டின் பாஹியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ள நிலையில், இது வரலாற்றில் மிக மோசமான பேரழிவு என பாஹியா ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாஹியாவில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. இதற்கிடையில், வெருகா என்ற ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு அணைகள் அடுத்தடுத்து உடைந்ததால் சாலைகள், பாலங்கள் போன்றவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 72 நகராட்சிகள் அவசர நிலையில் இருப்பதாகவும்  பாஹியா ஆளுநர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments