அரக்கோணத்தில் துப்பாக்கியால் சுட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 4 பேரிடம் போலீசார் விசாரணை.!

0 2373

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே துப்பாக்கியால் சுட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 18ந்தேதி அன்று நள்ளிரவில் அவினாசிகண்டிகையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 3 பெண்கள் உட்பட நால்வரை துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சந்தேகத்தின்பேரில் திருவள்ளூர் மாவட்டம் வியாசபுரம்  பகுதியை சேர்ந்த  4 இளைஞர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments