தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் கோவிலில் அனுமதியா? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

0 2084

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் கோவிலில் அனுமதியளிப்பது குறித்து, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும், என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வே அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவை ஆய்வு செய்த பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஒமைக்ரான் பரவல் காரணமாக புத்தாண்டு நிகழ்ச்சிக்கு கோவில்களில் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக, நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் முடிவெடுப்பார், என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் கோயில்களுக்கு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments