இஸ்லாமியர் அல்லாதோருக்கு முதன்முறையாக திருமணச் சான்று வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாதவருக்கு திருமணச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் வசித்து வந்த கனடா நாட்டுத் தம்பதிக்கு திருமணச் சான்று வழங்கப்பட்டுள்ளதாக WAM செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில், 90 விழுக்காடு மக்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றாலும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இதுவரை திருமணச் சான்று வழங்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் துனீசியா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளும் திருமணச் சான்றுகளை வழங்கி வருகின்றன.
Comments