மதுரையில் அப்பள கம்பெனி பெயரில் லட்சக்கணக்கில் மோசடி.! பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு

0 27646

மதுரையில் அப்பள கம்பெனியில் முதலீடு செய்வதாக கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நெடுங்குளம் மற்றும் வண்டியூர் தாசில்தார் நகரில்  தமிழன் அப்பளம்  மற்றும் தமிழன் மைக்ரோ பைனான்ஸ் என்ற நிறுவனம் 10ஆயிரம் ரூபாய் முதல் 10லட்சம் வரை முதலீடு செய்தால் மாதம் தோறும் அப்பளம் வழங்கப்படும் என்றும்  அதனை பேக்கிங் செய்து கொடுத்தால் கூடுதல் தொகை வழங்கப்படும் என்றும் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

இதனை நம்பி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.இந்நிலையில் திடீரென இந்த இரு நிறுவனங்களும் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments