கஞ்சா போதையில் பெற்ற தாயை அரிவாளால் தாக்கி தீ வைத்து எரிக்க முயற்சி செய்த மகன்

0 1934

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கஞ்சா போதையினால் பெற்ற தாயை அரிவாளால் தாக்கி தீ வைத்து எரிக்க முயற்சி செய்த இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்னம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி-பஞ்சவர்ணம் தம்பதிக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளான். இவன் கஞ்சா போதையினால் அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை தங்களின் தோட்டத்தில் விவசாய பணி செய்து கொண்டிருந்த தாயிடம் சதீஷ்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

பின்னர் அவரை  அரிவாளால் சரமாரியாக தாக்கி  தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளான். தாயின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments