கையில் கத்தியுடன் ரகளை.. சூர்யா, விக்ரம், விஜய் வழிப்பறி வழக்கில் கைது..! பரத் தலையில் தாக்குதல்..!
திருவள்ளூரில் கஞ்சா போதைக்கு அடிமையான 4 இளைஞர்கள், கையில் கத்தியுடன் வீதியில் இறங்கி ரகளையில் இறங்கியதுடன் , வழிப்பறியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். கெத்துக்காக கத்தி பிடித்து ஜெயிலில் கம்பி என்னும் சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
திருவள்ளூர் ஜெ.என் சாலையிலுள்ள துணிக்கடையில் வேலை செய்து வருபவர் சின்ன ஈக்காடு பகுதியைச் சேர்ந்த பரத். வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்ற இவரை கஞ்சா போதையில் கத்தியுடன் மிரட்டிய கும்பல் ஒன்று தலையில் பலமாக தாக்கி 1000 ரூபாயை பறித்துக் கொண்டு விரட்டி உள்ளது.
மேலும் அதே பகுதியில் உள்ள துணி கடைக்குள் புகுந்து உரிமையாளர் சதீஷிடம் கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்து ஆயிரம் ரூபாய் திருடிச்சென்றனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்த விஜய், வள்ளுவர் புரத்தை சேர்ந்த சூர்யா , காக்களூர் பகுதியை சேர்ந்த விக்ரம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை திருவள்ளூர் நகர காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களது செல்போனில் இருந்து அவர்கள் கத்தியுடன் ரகளை செய்த காட்சிகள் கைப்பற்றப்பட்டன.
அப்போது கத்தியை இடுப்பிலிருந்து எடுப்பது போலவும், கஞ்சா புகைப்பது போலவும் சமூக வலைதலங்களில் வீடியோவை பரப்ப விட்டு இந்த 4 பேரும் அச்சுறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
Comments