பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்துக்குச் சொந்தமான 166 சவரன் நகைகள் மீட்பு ; 11 பேர் கைது

0 2207
பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்துக்குச் சொந்தமான 166 சவரன் நகைகள் மீட்பு ; 11 பேர் கைது

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கொள்ளை போன பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்துக்குச் சொந்தமான 166 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

20 நாட்களுக்கு முன் மதுரை பெஸ்ட் மணி கோல்டு கிளையைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர், விழுப்புரம் கிளையிலிருந்து 166 சவரன் நகைகளையும் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு மதுரை நோக்கி காரில் சென்றுள்ளனர்.

கொட்டாம்பட்டி அருகே காரை மடக்கிய ஒரு கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தையும் நகையையும் கொள்ளையடித்துச் சென்றது. விசாரணையில் மதுரை கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்த விக்னேஷ்வரன் என்பவன் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

விழுப்புரத்தில் இருந்து நகையுடன் கார் வருவது குறித்து சமயநல்லூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவனுக்கு விக்னேஷ்வரன் தகவல் கொடுத்திருக்கிறான். முத்துப்பாண்டி ஒரு கும்பலை தயார் செய்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments