தனியார் மதுபான பாரில் மது வாங்கிசெல்லும் சிறுவன் - வைரலாகும் காட்சி

0 9366

மதுரை அருகேயுள்ள தனியார் மதுபான பாரில் சிறுவன் ஒருவன் மது வாங்கிசெல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாகமலை புதுக்கோட்டையில் செயல்படும் THE BRIGHT RECREATION CLUB என்ற மனமகிழ் மன்றத்தில் மது விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

சிறுவன் ஒருவன் இங்குள்ள பாரில் இரண்டு மதுபான பாட்டில்களை வாங்கி இடுப்பில் சொருகி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சிறுவர்களுக்கு மது விற்பனை செய்பவர்கள் மீதும் அந்த பார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments