துணிக்கடை ஊழியரிடம், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 4 சிறுவர்கள் கைது..!

0 2659

திருவள்ளூரில் துணிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேரு சாலையில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு வந்த பரத் என்பவரை முன்விரோதம் காரணமாகப் பத்தியால் பேட்டையைச் சேர்ந்த சிறுவர்கள் 4 பேர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடைக்குள் புகுந்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த 1,000 ரூபாயை எடுத்துச் சென்றனர்.

படுகாயமடைந்த பரத் போலீசில் புகாரளித்ததன் பேரில் அந்த 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments