இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி - மழையின் காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து

0 4325

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இரண்டாவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

செஞ்சூரியனில் உள்ள SuperSport மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 122 ரன்களும், மயங் அகர்வால் 60 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், மழையின் காரணமாக 2-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments