சிறார் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

0 3072
சிறார் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில், 2007ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும், அவர்களுக்கு கோவேக்சின் மட்டுமே செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2வது டோஸ் செலுத்திய 9 மாதங்களுக்கு பின்னரே பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும், இணை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் படி பூஸ்டர் போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுபவர்கள் கோவின் தளத்திலோ, தடுப்பூசி மையங்களிலோ பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்றும் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments