பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய நபர் கைது

சென்னை கொளத்தூரில் உடன் பழகிய பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவற்றை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டி, அவரை தனது இச்சைக்குப் பயன்படுத்த எண்ணியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டான்.
மாடலிங் துறையைச் சேர்ந்த 21 வயதான அந்தப் பெண்ணுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகப் பணிபுரியும் ரஞ்சித் என்ற நபர் சில தினங்களுக்கு முன் அறிமுகமானதாக சொல்லப்படுகிறது.
சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, அப்பெண்ணை தவறான நோக்கத்தில் ரஞ்சித் அணுக முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவனது தொடர்பை அப்பெண் துண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து போலியான பெண் பெயரில் மற்றொரு எண்ணிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்ட ரஞ்சித், அவரது மாடலிங் புகைப்படங்களைப் பெற்று மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த புகைப்படங்களை பெண்ணுக்கு அனுப்பி, தனது இச்சைக்கு இணங்குமாறு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர்.
Comments