அறந்தாங்கியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 750 சவரன் நகைத் திருட்டு..!

0 5842

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து, 750 சவரன் நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோபாலப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஜகுபர்சாதிக் என்பவர் புருனே நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஊரில் இவருக்குச் சொந்தமான பிரம்மாண்ட வீடு ஒன்று பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.

இவரது சகோதரிகள் அவ்வப்போது வந்து பரமாரிப்புப் பணிகளை பார்த்துச் செல்வர். இந்த நிலையில், காலை இந்த வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 750 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments