நான் யார் தெரியுமா ? என் சட்டையையே பிடிக்கிறாயா ? உடனே புதுசட்டை வாங்கித் தா... போதையில் காவலரை ஆபாசமாக மிரட்டிய நபர் கைது

0 3179

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் போக்குவரத்துக் காவலரை போதை ஆசாமி ஒருவன் ஆபாசமாகப் பேசி மிரட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் போலீசார், அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் ஒரே பைக்கில் வந்த 3 பேரை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.

அவர்கள் நிற்காமல் சென்றதால், பின்னால் அமர்ந்திருந்தவனைப் பிடிக்க முயன்றபோது, அவனது சட்டை பட்டன் அறுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, நான் யார் தெரியுமா ? என் சட்டையையே பிடிக்கிறாயா ? உடனே புது சட்டை வாங்கித் தா என்று ஆபாசமாகப் பேசி காவலரிடம் எகிறினான்.

இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments