நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

0 1552
நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

சென்னை அடுத்த பூந்தமல்லியில், நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர், பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள டீ கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததையடுத்து, உரிமையாளர் மைக்கேல் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நள்ளிரவில் கடைக்குள் சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த மர்ம நபர், சிசிடிவி கேமராக்களை திசைத்திருப்பி வைத்துவிட்டு திருட்டில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments