ஒடிஷாவில் வீட்டிற்கு வெளியே ஊர்ந்து கொண்டிருந்த அரிய வகை அல்பினோ பாம்பு மீட்பு

0 2529
ஒடிஷாவில் வீட்டிற்கு வெளியே ஊர்ந்து கொண்டிருந்த அரிய வகை அல்பினோ பாம்பு மீட்பு

ஒடிஷாவில் உள்ள ஜாஜ்பூரில் வீட்டிற்கு வெளியே ஊர்ந்து கொண்டிருந்த அரிய வகை அல்பினோ பாம்பை, பாம்பு மீட்பு பணியாளர்கள் வந்து பத்திரமாக பிடித்துச் சென்றனர்.

அல்பினோ பாம்பு அல்பினிசம் எனப்படும் வெளிறல் நோயால் பாதிக்கப்பட்ட வெண்மை நிற பாம்பாகும். இதன் உடலில் சிகப்பு நிற புள்ளிகள் காணப்படும்.

இந்த அரிய வகை பாம்பு ஜாஜ்பூரில் உள்ள வீடு ஒன்றின் வெளியே ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்து அச்சமடைந்த குடியிருப்பாளர்கள் பாம்பு மீட்பு பணியாளர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.

இதன் பேரில் அங்கு சென்ற பாம்பு மீட்பு பணியாளர்கள் அதனை பாதுகாப்பாக மீட்டு எடுத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments