இஸ்ரேலுக்கு சவால் விடும் வகையில், ஒரே நேரத்தில் 16 ஏவுகணைகளை செலுத்தி ஈரான் ஒத்திகை

போர் பயிற்சியின்போது நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை செலுத்தி ஈரான் ஒத்திகை பார்த்திருப்பது, வளைகுடா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் பல்வேறு வகையான 16 ஏவுகணைகள் ஒரேநேரத்தில் செலுத்தப்பட்டு, இலக்குகளை தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உள்ள 2 ஆயிரம் கிலோ மீட்டர் இலக்குகளையும் தங்கள் ஏவுகணை தாக்கும் திறன் கொண்டது என ஈரான் கூறுகிறது.
இந்த ஏவுகணை ஒத்திகை இஸ்ரேலுக்கான "தெளிவான சமிக்ஞை" என்று ஈரான் நாட்டின் தலைமைத் தளபதி ஹோசைன் சலாமி (Hossein Salami ) பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், போர் பயிற்சியின்போது இவ்வாறு ஏவுகணைகள் செலுத்தி ஒத்திகை நடத்தப்பட்டதற்கு, பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது.
அணுஆயுத சக்தி கொண்ட நாடாக கருதப்படும் ஈரானின் முயற்சிகளுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஈரான் இவ்வாறு ஏவுகணை தாக்குதல் ஒத்திகையை நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments