அரசு பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் மாவட்ட ஆட்சியர்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா 2-வது வாரமாக அரசு பேருந்தில் பயணித்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிள், அல்லது பொதுப்பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து கீழநாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து அரசு பேருந்து மூலம் கீழவீதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஆட்சியர் லலிதா, அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக சென்றார்.
மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணத்திட்டத்தில் பயணம் செய்த ஆட்சியர், பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்ததோடு, பொதுமக்களிடம் முக கவசம் அணிந்து வெளியில் வர அறிவுறுத்தினார்.
Comments