சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

0 4862
சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

பஞ்சாப் தலைநகர் சண்டிகர் மாநகராட்சியின் 35 கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தேர்தலில், முதல்முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாரதிய ஜனதா 7 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. முழுமையான முடிவுகள் இன்று பிற்பகலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments