மதம் மாறியவர்கள் தாய் மதத்திற்கு திருப்ப வேண்டும்.. பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் சலசலப்பு.!

இந்து மதத்தில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு திரும்ப அழைத்து வரவேண்டும், என தான் கூறிய கருத்தை திரும்பப் பெறுவதாக, பாஜக எம்.பி.,யும் அக்கட்சியின் இளைஞரணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி ஸ்ரீகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் பணியில், கோயில்களும் மடங்களும் ஆண்டு இலக்கு வைத்து செயல்பட வேண்டும் என தேஜஸ்வி சூர்யா கூறியது பல்வேறு தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேஜஸ்வி சூர்யா, "இந்தியாவில் இந்து மதத்தின் புத்தெழுச்சி" என்ற தலைப்பில் தான் பேசியதாகவும், தனது பேச்சின் ஒருபகுதி தவிர்த்திருக்க வேண்டிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிப்பதாகவும், இதனால் நிபந்தனையின்றி தனது கருத்தை திரும்பப் பெறுவதாகவும், ட்விட்டரில் வெளியிட்டுள்ள தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Comments