6 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தேன்.. தாக்கிய பாம்பு ஒரு வகை விஷப்பாம்புதான் -சல்மான் கான்

0 4850

பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நடிகர் சல்மான்கான், தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சல்மான்கான் பன்வல்-லில் உள்ள பண்ணை வீட்டில் இன்று தனது 56-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார்.

நேற்று பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது, பாம்பு கடித்தது தொடர்பாக கூறிய அவர், காட்டிற்குள் அமைந்துள்ள பண்ணைவீட்டில் உள்ள அறை ஒன்றுக்குள் பாம்பு புகுந்ததும் குழந்தைகள் அதைப் பார்த்து அச்சமடைந்ததாகவும், உடனே தான் குச்சி ஒன்றை கேட்டு வாங்கி பாம்பை அகற்ற முயன்ற போது குச்சி சிறிதாக இருந்ததால் பெரிய குச்சியை கேட்டு வாங்கி பின்னர் அந்த குச்சியில் பாம்பை எடுத்து காட்டிற்குள் விட முயன்றதாக கூறினார்.

அப்போது குச்சியில் தனது உடலை சுற்றிக்கொண்ட பாம்பு, கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி தனது கையருகே வந்து விட்டதால் மற்றொரு கையால் பாம்பை இறுகப்பற்றிக்கொண்டு குச்சியை கீழே போட்டுவிட்டு அதை காட்டுக்குள் விட முயன்றபோது பாம்பு தன்னை 3 முறை கடித்ததாக கூறியுள்ளார்.

அது ஒரு வகை விஷப்பாம்புதான் என தெரிவித்த அவர், மருத்துவமனையில் 6 மணி நேரம் இருந்து சிகிச்சை பெற்றதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments