உத்தரப் பிரதேசத்தில் 200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்.. சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயின் கைது.!

0 2410

உத்தரப் பிரதேசத்தில் சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயின் வீட்டில், சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னூஜ் மாவட்டத்தில் ஒடோகெம் என்ற பெயரில் சென்ட் தொழிற்சாலை நடத்தி வரும் இவர், முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்க்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் ஜிஎஸ்டி வரி முறையாக செலுத்தாமல் மோசடி செய்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை அதிகாரிகள், அவரது வீடு, அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, 200 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கைப்பற்றப்பட்டதுடன், பெருமளவு சந்தன எண்ணெய் மற்றும் சென்ட் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட பணம் தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமானது என கூறியதாகவும், ஆனால் இதனை அவரது உறவினர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டு, அவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments