திருவள்ளூர் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை சேதம்.. ஒருவர் சரண்

0 1576

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தந்தை பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய நபர், தாமாக முன் வந்து போலீசில் சரணடைந்த நிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பொன்னேரி புதிய பேருந்து நிலையம அருகே அமைந்துள்ள பெரியார் சிலையின் முகம் சிதைக்கப்பட்டும், மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதாக செல்லக்கிளி என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிலையை துணியால் மறைத்து, சிலையை சேதப்படுத்தியதற்கான காரணம் குறித்து சரணடைந்த செல்லக்கிளியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments