மறைந்தார் பாடகர் மாணிக்க விநாயகம்..!

0 5722

தமிழ் திரை உலகின் பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73... வெண்கலகுரலால் நாட்டுப்புற பாடலில் புகழ்பெற்று விளங்கிய மாணிக்க விநாயகத்தின் வாழ்க்கை பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்து தனது வெண்கல குரலால் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாக ஆட்டம் போடவைத்தவர் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம்..!

ஏராளமான நாட்டுப்புற பாடல் மற்றும் பக்தி பாடல்கள் பாடி இருந்தாலும், விக்ரமின் தில் மற்றும் விஜயகாந்த் நடிப்பில் உருவான தவசியின் அறிமுகப்பாடலோடு 2001 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார் மாணிக்க விநாயகம் ..

அறிமுகப்பாடல் ராசிக்காகவே தூள் படத்திலும் அவரது குரல் பட்டையை கிளப்பியது

துள்ளாட்டம் போட வைக்கும் குரல் வளத்தால் மாணிக்க விநாயகத்தின் பாடல்கள் பட்டி தொடியெல்லாம் பிரபலமடைந்தது

பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட மற்ற பின்னணி பாடகர்களோடு சேர்ந்தும் மாணிக்க விநாயகம் பாடிய பாடல்கள் ஹிட் அடித்தது

அரண் படத்தில் காஷ்மீரின் இன்றைய நிலையை உருக்கமான குரலால் பாடி பலரது உள்ளங்களை உருகவைத்தவர் மாணிக்கம் விநாயகம்

படங்களில் கொண்டாட்டமான பாடல்களை பாடியதோடு குண்ச்சித்திர வேடங்களில் நடித்தும் வந்தார்

சினிமாவிலும், உள்நாடு வெளி நாடு என்று பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் தனது குரல்வளத்தால் ரசிகர்களை மகிழ்வித்து வந்த பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை காலமானார்.

அண்மையில் இதய பாதிப்பு காரணமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது மாணிக்க விநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மாணிக்க விநாயகம் உடலால் மறைந்தாலும், உற்சாக குரலில் அவர் பாடிய பாடல்களால் ரசிகர்களில் உள்ளங்களில் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்வார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments