சொல்வதெல்லாம் பொய்..! கண்ணுல வைக்காத மை.! அல்டாப் அன்னபூரணி ஓட்டம்..! 1ந்தேதி புரோக்கிராம் கேன்சல்

0 6576

சென்னையில் அடுத்தவர் கணவனை அபகரித்த பஞ்சாயத்தில் சிக்கிய பெண் ஒருவரை பிடித்து,  அருள்வாக்கு அம்மன் என்று கூறி மர்மகும்பல் ஒன்று புத்தாண்டு அன்று சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவரது பஞ்சாயத்து வீடியோ வெளியானதால் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அம்மன் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடந்து வந்த குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில், பங்கேற்று தாலி கட்டிய கணவனை அம்போவென விட்டுவிட்டு, வேறொரு பெண்ணின் கணவன் தான் வேண்டும் என்று பட்டவர்த்தனமாக அபகரித்து சென்ற இந்த அல்டாப் அன்னபூரணி தான், மர்ம கும்பலால் உருவாக்கப்பட்டுள்ள திடீர் அருள்வாக்கு அன்னபூரணி அரசு அம்மன்..!

கடந்த இரு மாதங்களாக முக நூலில் அருள் பாலித்து வரும் இந்த திடீர் அம்மனுக்கு நிலையான முகவரி எல்லாம் கிடையாது.

ஊருக்கு 10 பேருக்கு மஞ்சள் சட்டையை தைத்து கொடுத்து இவர் சொல்றது எல்லாம் அப்படியே நடக்குது என்று உருக்கமான குரலில் அள்ளி விட்டு வீடியோ பதிவிட்டுள்ளனர்

அம்மனின் திய்வ தரிசனத்துக்கு கட்டணம் இல்லை என்றும் முன்பதிவிற்கு கட்டணம் என்றும் கூறி செங்கல்பட்டில் உள்ள குறிப்பிட்ட திருமண மண்டபத்தில் கூட்டம் சேர்ப்பதை வாடிக்கையாக்கி உள்ளனர்

அங்கு தெய்வத்துக்கு நிகராக அல்டாப் அன்னபூரணியை சிம்மாசனத்தில் அமர வைத்து பூஜை செய்வது பின்னர் அவர் தான் சக்தி வாய்ந்த கடவுள் என்று கூறி அன்னபூரணியின் வீடியோவை முக நூலில் பதிவேற்றுவதையும் முழு நேர வேலையாக அந்த கும்பல் செய்து வந்துள்ளது

அந்தவகையில் முகவரி இல்லா இந்த மர்ம கும்பல் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தாண்டையொட்டி அனைவரது நோய்களையும் நீக்கும் வகையில் இந்த டுபாக்கூர் அம்மனின் திவ்யதரிசன பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னபூரணிக்கும் அவரது காதல் வாழ்க்கைக்கும் லட்சுமிராமகிருஷ்ணன் பஞ்சாயத்து செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஞாயிற்றுக்கிழமை வெளியானது

இதையடுத்து எந்த சமூக வலைதளத்தை பயன் படுத்தி அல்டாப் அன்னபூரணி, கடவுள் அவதாரமாய் உருவாக்கப் பட்டாரோ, அதே சமூக வலைதளத்தில் அன்னபூரணியை ஆன்மீக அன்பர்கள் வார்த்தைகளால் முறைவாசல் செய்தனர்

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன், நான் தான் கடவுள் என்று சொல்பவர்களை நம்புவது முட்டாள் தனம் என்றும் அன்னபூரணி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வீடியோக்களை பார்த்தால் நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த பஞ்சாயத்து வீடியோ வெளியானதில் இருந்து ஏமாற்றத்துக்குள்ளான பக்தர்கள் பலரும் அன்னபூரணியை இயக்கும் மர்ம கும்பலின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், 4 செல்போன் எண்களையும் சிவிட்ச் ஆப் செய்து விட்டு இந்த போலி அவதார கும்பல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது. இந்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரணையை முன்னெடுத்து உள்ளனர்.

அதே நேரத்தில் சட்டப்படி விவாகரத்து பெறாமல் 12 வருடம் வாழ்ந்த மனைவியை கைவிட்டு, இந்த பெட்ரமாஸ் லைட்டு தான் வேண்டும் என்று சென்ற அந்த டி சர்ட் மன்மதனையும் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments