ஒமைக்ரான் மற்றும் பறவைக் காய்ச்சல் பரவல் எதிரொலி.! தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்.!

தமிழ்நாடு கேரளா எல்லையில், ஒமைக்ரான் மற்றும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாகவும், ஒமைக்ரான் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து கொரோனா நெகட்டிவ் மற்றும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இன்றி வருவோரை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
Comments