தஞ்சாவூரில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் குத்தகை பாக்கி செலுத்தாமல் இருந்த மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு சீல்.!

0 2434

தஞ்சாவூரில் 12 கோடி ரூபாய் குத்தகை பாக்கி செலுத்தாமல் ஏமாற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், டெம்பிள் டவர் என்ற three ஸ்டார் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஹோட்டல் செயல்பட்டு வந்த இடம்  வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்ற நிலையில், 1994ஆம் ஆண்டு 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்திற்கு விடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை செல்வராஜ் என்பவர் எடுத்து ஹோட்டல் நடத்தி வந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வேறு சிலருக்கு அந்த இடத்தை செல்வராஜ் வாடகைக்கு விட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அத்தோடு, சுமார் 12 கோடி ரூபாய் அளவில் குத்தகை பாக்கியை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, ஒப்பந்த காலத்தை ரத்து செய்து வருவாய்த்துறை அனுப்பிய நோட்டீஸ், இடத்தை உடனடியாக காலி செய்யக் கூறி அனுப்பப்பட்ட நோட்டீஸுகளுக்கு செல்வராஜ் பதிலளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை தண்டோரா போட்டு வெளியேற்றி சீல் வைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments