விளைநிலங்களில் உலா வரும் காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு.!

0 1564

சத்தியமங்கலம் அருகே, விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகளை விரட்ட முயன்றபோது, ஒரு யானை வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி மலைப்பகுதியான மல்லன்குழி கிராமத்தில், கடந்த 2 நாட்களாக 9 காட்டு யானைகள் விளைநிலங்களில் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. பயிர்களை சேதப்படுத்தும் அந்த யானைகளை விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் விரட்ட முயன்றபோது, கூட்டத்திலிருந்த ஒரு காட்டு யானை திடீரென வனத்துறையினரை துரத்தியது.

இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர் நீண்ட நேரம் போராடி பட்டாசுகளை வெடித்து, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments