பிரேசிலில் கனமழையால் உடைந்த இரு அணைகள்.. பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு.!

0 2087

பிரேசில் நாட்டில் தொடர்ந்து பெய்த கனமழையால் இரு அணைகள் உடைந்தன..

அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பஹியா என்ற இடத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெருகா என்ற ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த இகுவா அணை நேற்றிரவு உடைந்தது. ஏற்கனவே அணை பலமிலந்து காணப்பட்டதால் அந்தப் பகுதியில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற உத்தரவிட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் ஜெஸியாபே என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த மற்றொரு அணையும் உடைந்தது. இரு அணைகளும் அடுத்தடுத்து உடைந்ததால் சாலைகள், பாலங்கள் போன்றவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments