பாலாற்றில் குளிக்க சென்ற சிறுமி உட்பட 3 பேர் பலி.! இரண்டு நாட்ளாக போராடி சடலங்கள் மீட்பு

0 2252

செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற சிறுமி உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமசை முன்னிட்டு நேற்று, சென்னையை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் அச்சிறுப்பாக்கம் மலைமாதா தேவாலயத்திற்கு வந்தனர். ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய லியோன்சிங் ராஜா, அவரது மகள் மற்றும் அண்ணன் மகன் லெனின்ஸ்டன் எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், படகு மூலம் மூன்று குழுக்களாக பிரிந்து தேடி வந்தனர்.

ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு சடலங்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள், சிறுவன் லெனிஸ்டன் சடலத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில், திடீரென மேலே மிதந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments