ஜப்பான் நாட்டின் வடக்கு, மேற்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு.. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

ஜப்பான் நாட்டில் கடும் பனிப்பொழிவு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பானின் இரு பெரும் விமான நிறுவனங்களான ஏஎன்ஏ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 79 விமானங்களும் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 49 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பயணிகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
Comments