கன்னியாகுமரியில் குபேர ஐயப்பசுவாமி கோவிலில் மண்டல பூஜை பக்தர்கள் பங்கேற்பு

0 1165

கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல் குளத்தில் உள்ள குபேர ஐயப்பசாமி கோவிலில் மண்டல பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

காலை முதல் மாலை வரை தீபாராதனை, ஐயப்பன் சன்னதியில் உள்ள 18 படிகளுக்கும் விளக்கேற்றி, மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு படி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து 18 வகை மலர்களால் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது.

இதில் திரளானோர் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments