டெல்லியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு

0 2667

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து 2ஆவது நாளாக 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று கர்நாடகாவில் நாளை முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments