பீகாரில் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் - பிரதமர் மோடி

0 1402

பீகார் மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அம்மாநிலத்தின் முஸாபர்பூர் என்ற இடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ள நிலையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments