மும்பையில் நேற்று ஒரே நாளில் கடந்த 7 மாதங்களை விட அதிகரித்த கொரோனா தொற்று

0 3016

மும்பையில் கடந்த 7 மாதங்களை விட நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு 21 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அந்நகரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகம் என மகாராஷ்டிர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதே அதிகபட்சமாக இருந்ததாகவும் சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஜூஹூ கடற்கரை பகுதியில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியதே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments