காஞ்சிபுரத்தில், குடிபோதையில் வாகனத்தை இயக்கிய போதை ஆசாமி புதுமணப் பெண் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அப்பெண் பலி.!

0 2720

காஞ்சிபுரத்தில், குடிபோதையில் வாகனத்தை இயக்கிய போதை ஆசாமி சாலையோரம் நின்றிருந்த புதுமணப் பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் அப்பெண் பலியானார்.

திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன்-கீதப்பிரியா தம்பதியினர் சென்னையில் நிகழ்ச்சி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் மருந்தகத்திற்கு மருந்து வாங்கி விட்டு இரு சக்கர வாகனம் அருகே நின்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று சாலையோர நின்றிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments