மகாராஷ்டிராவில் வெடிமருந்து உதவியுடன் ஏடிஎம்மைத் தகர்த்த கொள்ளையர்கள்.. ரூ 17 லட்சம் கொள்ளை

0 1712

மகாராஷ்டிராவில் ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்த கொள்ளையர்கள் அதில் இருந்த 17 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

புனே நகருக்கு அருகில் உள்ள ஆலண்டி என்ற இடத்தில் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஏடிஎம்முக்கு வந்த கொள்ளையர்கள் ஜெலட்டின் குச்சி மூலம் அதனைத் உடைத்தனர்.

பின்னர் அதிலிருந்த 17 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை எடுத்துள்ளதாகவும், ஆனால் கொள்ளையர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் புனே கிராமப் பகுதியில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments