பெங்களூரிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் குட்கா-வை கடத்திய நான்கு பேர் கைது.!

0 3862

பெங்களூரிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் குட்கா-வை கடத்திய நான்கு பேரை கைது செய்த போலீசார் ஆரரை டன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணகிரி  வழியாக தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர வாகனசோதனை மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், அவ்வழியாக வந்த மினி கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் 300 மூட்டைகளில், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆறரை டன் குட்கா, பான்மசாலா கடத்தி செல்வது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments