ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசின் பன்னோக்கு மருத்துவ குழுவினர் சென்னை வருகை.!

0 1488

ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசின் பன்னோக்கு மருத்துவ குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகாவில் கடந்த 2-ந்தேதி ஒமைக்ரான் பாதிப்பு தெரிய வந்தது.

அதன்பிறகு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஓமைக்ரான் பரவி உள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

அதன்படி தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று சென்னை வந்த குழுவில் மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் டாக்டர் வினிதா, டாக்டர் புர்பசா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளனர். தமிழ்நாட்டில் 3 நாட்கள் வரை தங்கி இருந்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வார்கள்.

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எங்கெங்கு உள்ளனர். அவர்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், வெண்டிலேட்டர் வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments