ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பெண்கள் காயம்

0 3732
ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பெண்கள் காயம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பெண்கள் காயம் அடைந்தனர்.

விழுப்புரத்திலிருந்து 36 பெண் பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக டூரிஸ்ட் பேருந்தில் கடந்த 23-ம் தேதி புறப்பட்டுள்ளனர். மேல்மருவத்தூர், இராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரையில் உள்ள வெட்காளியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

குமாரசக்கனபுரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென பேருந்தின் ஸ்ட்டியரிங் லாக் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் இடதுபுறம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments