பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை ; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 2417
பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை

பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை என்றும், எந்த நாட்டிற்கும் நம் மீது தீய பார்வையை செலுத்த துணிச்சல் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் அவை உருவாக்கப்படுவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி அலகு கட்ட அடிக்கல் நாட்டி பேசிய ராஜ்நாத் சிங், எப்பொழுதோ இந்தியாவிலிருந்து பிரிந்த நாட்டின் நோக்கங்கள், மோசமாகவே இருப்பது ஏன் என்று புரியவில்லை என பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார்.

இந்த உற்பத்தி அலகு அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையாக கட்டமைக்கப்படும் என்றும் ஆண்டிற்கு 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணைகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments