காஷ்மீரில் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொலை

0 2327

காஷ்மீரில் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

பஹீம் பட் என்ற அவன், கடந்த 22ஆம் தேதி பிஜ்பெஹரா காவல்நிலையத்தில் பணியிலிருந்த முகம்மது அஷ்ரப் தர் என்ற உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவன் ஆவான்.

இன்று காலை அனந்த்நாக் மாவட்டத்தில், ராணுவமும், காவல்துறையும் இணைந்து நடத்திய என்கவுண்ட்டரில் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி, ஜம்மு காஷ்மீர் ஐஎஸ் இயக்கத்தில் அண்மையில் இணைந்தவன் என காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் ஜம்மு காஷ்மீர்  என்பது சர்வதேச அளவில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பின் துணை அமைப்பாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments