சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது

சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து விடிய விடிய, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொண்டலாம்பட்டியில் உள்ள சிவதாபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில், வீட்டை சுற்றி வளைத்த போலீசார் 14 பேரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Comments